தமிழகம் முழுவதும் நகைக்கடைகள் மூடல்

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகைக்கடைகளும் மார்ச் 31 வரை மூடப்படும் என நகைக்கடை உரிமையாளர் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜிலானி அறிவித்துள்ளார்.

உலக நாடுகளை பெரும் அச்சுறுத்துலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் பரவிய இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 425 பேர் பாதிக்கப்பட்டு, 24 பேர் குணமடைந்துள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்த மாவட்டங்களில் அத்தியாவசிய கடைகளை தவிர, அனைத்து கடைகளையும் மூட மத்திய அரசு வலியுறுத்தியுள்ளன.